சில எனக்கு ஒத்து வராத விஷயங்களும் இருந்தன முதலில் சாப்பாடு எங்கே போனாலும் மாமிசம் தான், எனக்கோ மாமிசம் சாப்பிட்டு பழக்கம் இல்லை, விவேக் சொல்லுவது மாதிரி அவர்கள் ஊர்வன, ஓடுவன, பறபன, ஓடுறது போடுறது என்று எல்லாத்தையும் சாப்பிடுகிறார்கள் எனக்கு தான் பிடிக்கவில்லை.
இனிமேல் அங்கே நான் போன சில பொழுது போக்கு இடம் பற்றி சொல்கிறேன், desert சபாரி போனேன் அங்கே பெல்லி டான்ஸ் நல்லா இருந்தது வீடியோ வும் எடுத்தேன் அதை கீழே கொடுத்துள்ளேன் பார்த்து ரசிக்கவும.பெல்லி டான்ஸ் பார்க்க வந்த கூட்டத்தில் ஒரு தமிழ் குடும்பம் இருந்தது அப்பா, அம்மா மற்றும் அவர்களுடைய பொண்ணு, பாவம், மூணு பேரும், பொண்ணு இருக்காளே ன்னு அப்பா, அம்மா பெல்லி டான்ஸ்ஐ அவர்கள் ரெண்டு பேரும் அனுபவிக்க வில்லை, பொண்ணு, அப்பா மற்றும் அம்மா இருக்காங்களே என்று பார்க்க கூட வில்லை, பாவம்தான் மூணு பேரும். பெல்லி டான்ஸ் ஆடின பொண்ணு கொஞ்சம் குண்டு தான் நம்ம ஊரு ஜெயமாலினி மாதிரி இருந்தாள், அவ்வளவு தாராளமா :)
கொஞ்சம் போட்டோவும் எடுத்தேன் அதையும் கீழே கொடுத்துள்ளேன் பார்த்து விட்டு சொல்லவும்,
எங்க கூட வந்த பயணிகளில் ஒருத்தி (அழகாக இருக்கா)
Desert சபாரி போகும் பொழுது எடுத்த படம்
இது கண்ணன் (இவர் தான் என்னை துபாய் கூட்டிகிட்டு போனது) மற்றும் அவர் Boss
சொல்லவேண்டியது இல்லை இதுதான் நான்
சொல்லவேண்டியது இல்லை இதுதான் நான்
No comments:
Post a Comment