துபாய் போயிட்டு எட்டாம் தேதி வந்து விட்டேன், போனதில் நான் கற்றது
1) நமது இந்திய பணத்தில் சம்பாதித்து விட்டு அங்கே சிலவு முடியாது ஏனென்றால் நமது பதினாறு ருபாய் அங்கே ஒரு ருபாய், அதினால் நம்மோட ஆயிரம் ருபாய் அங்கே போன உடன் பதினாறு திராம் ஆகி விட்டது, பதினாறு திராம் வச்சு என்ன பண்ண, வெறுமன எல்லாவற்றையும் பார்க்கதான் முடியும்,
2) அடுத்தது சுத்தம் , நம்ம ஊரு இப்படி என்னுடைய வாழ் நாளில் இப்படி ஆகுமா என்பது தெரியாது
3) நாட்டில் ஒரு போலீசை பார்க்க வில்லை, ஆனாலும் எல்லாரும் ஒழுங்காக வண்டி ஒட்டுகிறார்கள், ஒரு டிராபிக் சிக்னலை மீறி போவது இல்லை, இது நம்ம ஊரில் ஒரு நாளும் பார்க்கமுடியாது
4) நாட்டில் போராட்டம் என்பது இல்லவே இல்லை, இரவு எட்டு மணி வரை வேலை பார்கிறார்கள், அவரவர் சக்திக்கு ஏற்ப இரவை கழிகிறார்கள், சும்மா வெட்டியா கலாச்சாரம் போச்சு என்று கத்துவது இல்லை.
மற்ற விஷயங்கள் மற்றும் சிறிது போட்டோ பற்றி நாளை எழுதுகிறேன்