Saturday, 28 March 2009

முதல் முறையாக வெளிநாடு போகிறேன்

ஏப்ரல் ஐந்தாம் தேதி துபாய் போகிறேன் சும்மா மூன்று நாள் தான், என்னுடுய மனைவியின் அக்கா கணவர் தொழில் விஷயமாக போகிறேன், பார்போம் என்ன புதிய விஷயம் வாழ்க்கை கற்று கொடுகிறது என்று. போயிட்டு வந்த பிறகு எழுதுகிறேன் என்னவெல்லாம் நடந்தது என்று.

Monday, 23 March 2009

தம் அடிப்பதை நிறுத்தி விட்டேன்

பதினாறு வருஷ பழக்கம் ரொம்ப கஷ்ட பட்டு நிறுத்தி விட்டேன், சும்மா மன தைரியியாம் அப்படிலாம் என்று சொல்ல மாட்டேன், "சிப்லா" கம்பெனி யின் புது மருந்தினால் தன் இது சாத்தியம் ஆனது, தினம் ஆறு விதம் ஒரு பன்னிரண்டு வாரம் சாப்பிடனுமாம், இன்று ஐந்து நாள் முடிந்து விட்டது வெற்றிகரமாக, சும்மா இத்தனை வருஷம் சிகரெட் செலவு எவ்வளோ ஆகி இருக்கும் என்று பார்த்தேன், கண்ணை கட்டி விட்டது, ஒரு நாளைக்கு பத்து சிகரெட் அடித்தேன் என்று வைத்து கொண்டாலும் ருபாய் 40/- ஒரு நாளைக்கு அப்படின்னா ஒரு வருஷத்துக்கு ருபாய் 14600/- , இதுவே பெரிய அமௌன்ட் தன் இதையே பதினாறு வருஷதுக்கு என்று எடுத்து கொண்டால் ருபாய் 2,33,600.00 அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோஓஓஓஓ எவ்வளவு பணம் போயிட்டு, இதை படிக்கிற மற்ற நண்பர்கள் மாறுவார்கள் என்று ஒரு சின்ன நப்பாசை

Monday, 16 March 2009

என்னுடுய மகளின் ஸ்கூல் கட்டணம்

இன்று என்னுடைய மகளின் பள்ளி கட்டணம் போய் இருந்தேன், மொத்தமாக வருஷத்திற்கு ருபாய் 11,400/- வாங்கி விட்டார்கள், அது போக ருபாய் 3,000/- புக்ஸ் காக வாங்கினார்கள், அனால் புக்ஸ் கொடுப்பதோ இதற்க்கு பாதி ருபாய்க்கு தான், போன வருடம் இதே மாதிரி நடந்தது கணக்கு கேட்க போனேன், அதுக்கு வேண்டும் என்றல் எங்க ஸ்கூலில் படிக்க வைங்கள் இல்லாட்டி நீங்கள் வேற ஸ்கூலில் சேர்த்து கொள்ளலாம் என்று சொல்ல்லி விட்டார்கள், நமக்கு வேற வழி, நீங்க ஒரு கணக்கும் கொடுக்க வேண்டம் என்று சொல்லி விட்டு வந்து விட்டோம். இது போக அந்த விழா இந்த விழா என்று வேற பணம் வாங்கி விடுகிறார்கள், நாம காலேஜ் படிக்கும் பொது கூட இவ்வளோ பணம் கட்டினது கிடையாது. பார்போம் அவள் காலேஜ் போற வரை எவ்வளோ ஆகுதுன்னு. இதுலே அவங்க அன்னுஅல் டே அன்றைக்கு பெரிய பேச்சு வேற எங்க ஸ்கூல் தான் பெற்றோர் கிட்டே இருந்து கணக்கு இல்லாமல் பணம் வாங்குறது கிடையாது என்று.

Saturday, 7 March 2009

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் பற்றிய என்னுடுய பார்வை, நமது தமிழ் மக்கள் எல்லோரும் செத்து மடிகிறார்கள் என்று எல்லோரும் கத்துகிறார்கள், அவர்களுக்கு நான் ஒன்று கேட்க விரும்புகிறேன், ஒரு தமிழனாய் அல்ல ஒரு இந்தியனாய் கேட்கிறேன், இதுவே ஒரு பங்களாதேஷ் அல்லது நேபாளி இந்திய வில் வந்து பல வருஷங்களை தங்கி விட்டு அவர்களும் ஒரு தனி நாடு வேண்டும் என்று போராடினால் நாம் ஒரு இந்தியனாய் என்ன செய்வோம் அதை தான் இலங்கை யும் செய்கிறது, நூறு வருஷம் முன்பு இந்த இடம் பிடிக்க வில்லை என்று தானே இந்திய வை விட்டு போனார்கள் அப்போ எங்கே போனது தமிழ் பாசம், எந்த நாட்டுக்கு போகிறோமோ அங்கே உள்ள சட்ட திட்டங்களை நாமும் பின் பட்ரதன் வேண்டும் அங்கே பொய் எங்களுக்கு புது சட்டம் வேண்டும் என்று போராடினால் இது தன் நிலைமை. அங்கே பொய் நாட்டுக்காக உழைத்தோம் என்றும் சொல்கிறார்கள் அனால் அதுக்கு பணமும் தானே பெற்றோமே. சொந்த நாட்டை விட்டே போனவர்கள் போன இடத்தில ஒழுங்காக இருக்காமல் வேண்டாத வேலை பார்த்தால் இது தன் நிலைமை. இதை எல்லாம் பார்த்தாவது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாட்டில் இருக்கும் மற்ற தமிழர்கள் ஒழுங்காக இருப்பார்கள் என நினைக்கிறன்.